கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை (22) கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டாரின் உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, தோஹாவின் பின் டர்ஹாம் சுற்றுப்புறத்தில் இந்த நான்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது.
மீட்பாளர்கள் ஒன்பது பேரை உயிருடன் மீட்டனர். இதேவேளை கொல்லப்பட்ட ஒருவர் கட்டிடம் இடிந்து விழுந்தபோது கட்டிடத்திற்குள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த இலங்கையர் 56 வயதுடைய நிஸ்ஸங்க சில்வா என அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 60 வயதுடைய அப்துல் ரஸாக் ஜமீல் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்டாரில் பணிபுரியும் அவரது மகனினால் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.