கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர், இராணுவ சிப்பாயான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஜூன் 5 ஆம் திகதியன்று, 50 வயதான இந்த பெண் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இராணுவ வீரரான மகனே கொலையாளியென தெரியவந்தது.
அதன்படி, கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றிவந்த, சந்தேகநபரான மகனை விசேட காவல்துறை குழுவொன்று கைது செய்துள்ளது.