மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார்.

பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version