மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார்.

அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது.

சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் பாடாய் படுத்துகிறார். கார் மீது ஏறுகிறார், ஒருவரின் ஸ்கூட்டரை பிடுங்கிக்கொள்கிறார், சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார்.

பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.

இறுதியில் அங்கு சுற்றி இருந்த பெண்கள் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள். இந்த வீடியோவை @kmrvikash11 என்ற டுவிட்டர் பயனர் பகிர்ந்துள்ளார்.

இதை பகிர்ந்த அந்த பயனர், “காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்” என்று எழுதியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version