லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராமுடைய ஒரு எரிவாயு சிலிண்டர் 1,000 ரூபா வரை  குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version