♠ செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தற்போது பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?

♠ தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்த மார்டின் கூப்பர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மொபைல் போனை கண்டுபிடித்த முதல் நபர் தற்போது எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

செல்போன் தந்தை என்று அறியப்படும் 94 வயதான மார்டின் கூப்பர், உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்தவர்,

செல்போனில் முதல் அழைப்பை மேற்கொண்டவர் என்ற பெருமையை கொண்டிருக்கிறார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மார்டின் கூப்பர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதில் தற்போது அவர் பயன்படுத்தி வரும் புதிய ஸ்மார்ட்போன், அதிநவீன மொபைல் போன் துறை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதன்படி மார்டின் கூப்பர் தற்போது முற்றிலும் புதிய ஐபோன், ஐபோன் 14 சீரிஸ் மாடலை பயன்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படும் முற்றிலும் புதிய ஐபோனினை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

புதிய போனினை தொடர்ச்சியாக பயன்படுத்த துவங்கும் முன், அதில் ரோட் டெஸ்ட் செய்கிறார். புதிய ஐபோன் மட்டுமின்றி மார்டின் கூப்பர் ஆப்பிள் வாட்ச் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார்.

தனது சாதனங்களை கொண்டு மின்னஞ்சல் பயன்படுத்துவது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, அன்றாட பணிகளை மேற்கொள்து மற்றும் காது கேட்கும் சாதனங்களை இயக்குவது உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறார்.

1928 டிசம்பர் மாத வாக்கில் பிறந்த மார்டின் கூப்பர், கொரிய போரில் அமெரிக்க ராணுவ அதிகாரியாக நீர்மூழ்கி கப்பலில் பணியாற்றி இருக்கிறார்.

பின் இந்த பணியை விட்டு வெளியேறிய மார்டின் கூப்பர் 1954 வாக்கில் மோட்டோரோலா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

மோட்டோரோலா நிறுவனத்தில் மட்டும் 29 ஆண்டுகள் மார்டின் கூப்பர் பணியாற்றி வந்தார். மோட்டோரோலா நிறுவனத்திலேயே 1973 வாக்கில், உலகின் முதல் மொபைல் போன்- மோட்டோரோலா டைனாடேக் 8000X மாடலை மார்டின் கூப்பர் உருவாக்கினார்.

இதை கொண்டு தான் உலகின் முதல் செல்போன் அழைப்பையும் மார்டின் கூப்பர் மேர்கொண்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version