ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தகறாறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்றபோது அவர் சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததாக தெரிவித்தனர்.

23 வயதான இளம் தாயொருவரே கொல்லப்பட்டுள்ளதுடன், அரநாயக்க பொலிஸாரால் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததையடுத்து பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version