மும்பை : பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் இரவு பார்ட்டியில் செம போதையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் அவ்வப்போது நைட்டி பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது அவர்கள், கேமிராக்களில் வசமாக சிக்குவது வாடிக்கையாகி விட்டது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி அனைத்திலும் பல ஹிட்படங்களை கொடுத்துள்ளார்.
அம்மாவை போலவே : இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.
ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூரும் அம்மாவைப் போல நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர் தமிழில் மெகா ஹிட் அடித்த லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
போதையில் ஸ்ரீதேவி மகள் : இந்நிலையில், நேற்றிரவு பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளுக்காக பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அந்த பார்ட்டியில், ஜான்வி கபூரின் சகோதரியான குஷி கபூர். நடிகை பூமி பெட்னேக்கர், அவரின் சகோதரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் வாரிசுகளும், பில்லியனர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், போதை தலைக்கு ஏறிய நிலையில் குஷி கபூர். நடிகை பூமி பெட்னேக்கர் ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
கசிந்த புகைப்படம் : இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த பார்ட்டியை ஊரி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று இரவு நடந்த இந்த பார்டியில், பாலிவுட் திரையுலகை சேர்ந்த, பிரபலங்களின் பிள்ளைகள் பலர் கலந்து கொண்டு போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியை அனுபவித்ததாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.