6 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

பிரேசிலியா, ஒரு திருமணம், ஒரு குழந்தையை சமாளிக்கவே பலரும் சிரமப்பட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில் ஒருவர் 6 மனைவிகளை கட்டிக்கொண்டு சமாளித்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் 6 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர் தற்போது 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்த உறவுகளைத் தவிர ஏற்கெனவே ஆர்தர் சில பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து இருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை அவருக்கு 10 திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். மேலும் பழைய திருமண உறவின் மூலம் 10 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி உல்லாசமாக வாழ்ந்துவரும் ஆர்தருக்கு ஒரு புதிய பிரச்சினை வெடித்து இருக்கிறதாம்.

அது என்னவென்றால் தனது ஒவ்வொரு மனைவியிடத்திலிருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஆர்தர் அதனை எப்படி செயல்படுத்துவது என தெரியாமல் விழிப்பிதுங்கி போயிருக்கிறார் என டெய்லி மெயில் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏனெனில் 6 பேரில் ஒருவர் மட்டும் கர்ப்பமாக்கி விட்டு மற்றவர்களை அதிருப்தியில் ஆழ்த்த தனக்கு மனமில்லை என்பதால் இந்த குழப்பம் நீடிப்பதாக ஆர்தர் கூறியிருக்கிறார்.

ஆகையால் இந்த நிலையை ஏற்படுத்தாமல் இருக்க 6 இல் முதல் மனைவியான லூவானாவின் கரு முட்டையை வைத்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார் ஆர்தர்.

இப்படி செய்வதால் ஆறு பேரில் எவருக்கும் எந்த மனக்கசப்பும் ஏற்பட்டுவிடாது என்பதால் இந்த முடிவை ஆர்தர் கையில் எடுத்திருக்கிறார்.

இதுபோக, முன்னாள் மனைவியுடனான பந்தத்தில் ஆர்தருக்கு ஏற்கெனவே மகள் இருப்பதால் அடுத்ததாக பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்திருக்கிறார்.

இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் முறைக்காக 40,798 அமெரிக்க டாலர் அதாவது 33 லட்சம் வரை செலவிட ஆர்தர் தயாராக இருப்பதாகவும்,

எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுப்பதற்கான யோசனைக்கு திறந்த மனதாக இருப்பதாகவும் ஆர்தர் கூறியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி 6 மனைவிகள் 6 குழந்தைகள் என்று விறுவிறுப்பாகச் செயல்பட்டு வரும் ஆர்தருக்கு உண்மையில் 10 பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் மூலம் 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தனது கனவு திட்டம் என்றும் கூறிவருகிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version