நேற்று பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் அனைவரும் அறிந்ததே முதலில் சக வீரர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில்

ராணுவம் அதை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது அதாவது யாரும் இதுவரை பிடிக்கப்படவில்லை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடவடிக்கைகளை இந்திய தரைப்படை மேற்கொண்டு வருவதாகவும் யாரும் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளது.

ராணுவம் சார்பில் 80ஆவது நடுத்தர ரெஜிமென்ட்டை சேர்ந்த மேஜர் அஷூதோஷ் ஷூக்லா அளித்துள்ள புகாரில் கன்னர் தேசாய் மோகன் மற்றும் மேஜர் ஷூக்லா ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்களை பார்த்ததாகவும் இருவரும் முகமூடி அணிந்து இருந்ததாகவும்

ஒருவன் கையில் INSAS துப்பாக்கி இருந்ததாகவும் மற்றொருவன் கோடாரி ஒன்றை வைத்திருந்ததாகவும் இருவரும் காலை 4.30 மணியளவில் அதிகாரிகள் மெஸ் அருகேயுள்ள இரண்டு அறைகளில் தங்களது பணி முடிந்து தூங்கி கொண்டிருந்த நான்கு வீரர்களை சரமாரியாக சுட்டு கொன்றதாகவும்

அப்போது இந்த தகவல் அறிந்து மேஜர் ஷூக்லா மற்றும் கன்னர் தேசாய் மோகன் அங்கு சென்ற போது நல்ல திடகாத்திரமான உடலமைப்பும் நடுத்தர உயரமும் கொண்டிருந்த அந்த இருவர் ராணுவ தளத்திற்கு மிக அருகே சண்டிகர் – பதிண்டா தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி ராணுவ தளத்தில் ஒரு INSAS துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் காணாமல் போன நிலையில் ராணுவம் சார்பில் பதிண்டா கன்டோன்மென்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது,

இதற்கிடையே இந்த தாக்குதலில் திருடு போன துப்பாக்கி தான் பயன்படுத்தப்பட்டு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கொல்லப்பட்ட நான்கு வீரர்களின் அருகில் சிதறி கிடந்த தோட்டா உறைகளை ஆய்வுகள் அனுப்பி வைத்துள்ளனர்,

நான்கு வீரர்களின் பெயர்களாவன யோகேஷ் குமார், கம்லேஷ், சாகர் பன்னே மற்றும் சந்தோஷ் நகரால் இவர்கள் அனைவரும் கன்னர் பதவி வகிக்கும் வீரர்கள் ஆவர்.

இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது, கம்லேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள வனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார்,

மற்றோருவரான யோகேஷ்குமார் தேனி மாவட்டம் முனியாண்டிபட்டியை சேர்ந்தவர் ஆவார், இந்த சம்பவத்தை அடுத்து இருவரின் கிராமங்களும் சோகத்தில் மூழ்கி உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version