கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டப் பணிப்பாளர் எல்.வி. சர்தா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்தும் மொத்தமாக ரூ. 70,558,100 ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 15 ஆம் திகதி 126,760 வாகனங்கள் மூலம் ரூ. 34,974,100 வருவாயும் ஏப்ரல் 16 ஆம் திகதி 129,465 வாகனங்கள் மூலம் ரூ. 35,584,000 வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது.
இரு தினங்களிலும் அபாயகரமான விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை. எவ்வாறாயினும், இரண்டு பாரதூரமற்ற சம்பவங்களும் வாகனங்கள் மற்றும் நெடுஞ்சாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தல் போன்ற சிறிய 20 சம்பவங்களுமே ஏப்ரல் 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது