கோவை: கோவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயன்றுள்ளார் சாமியார் ஒருவர். இதில் துயரம் என்னவென்றால் அந்த பெண்ணின் கணவரே இதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.
இந்த காலத்தில் சாமியார் என்ற போர்வையில் சிலர் மிக மோசமான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளியே தங்களை சாமியார் போல காட்டிக் கொண்டாலும் திரைமறைவில் இவர்கள் செய்யும் காரியம் மிக மோசமாகவே இருந்துள்ளது.
அதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. குழந்தை வரம் கேட்டு சென்ற பெண்ணிடம் சாமியார் அத்துமீறிய சம்பவம் கோவை நகர் முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சாமியார்: கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் தான்.. கார்த்திக் லட்சுமி நாராயணன். இவர் தெலங்கானா தலைநகர் ஹைதாராபாத்தில் உள்ள பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 201ஆம் ஆண்டு அதே பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
கும்பகோணத்தில் இரு தரப்பின் பெற்றோரின் சம்மத்துடனேயே திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது, ரூ.15 லட்சம் பணம், 100 பவுன் தங்கம், 15 கிலோ வெள்ளி வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமணமான கொஞ்ச காலத்திலேயே கார்த்திக் ஹைதராபாத்தில் பணிபுரிந்த நிறுவனத்தை விட்டுவிட்டு பெங்களூரில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
இதையடுத்து கார்த்திக் தனது மனைவியுடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த ஜோடி, 1.75 கோடி மதிப்பில் புது வீட்டையும் வாங்கி அதில் வசித்து வந்துள்ளனர்.
குழந்தை இல்லை: இருப்பினும், இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை பிறக்காமலேயே இருந்துள்ளது.
இதனால் இருவரும் விரக்தியில் இருந்த நிலையில், இதற்காக அவர்கள் பல மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இருப்பினும், அவர்களுக்கு எந்தவொரு முயற்சியும் கைகொடுக்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க கார்த்திக் பெங்களூரில் இருக்கும் நித்தியானந்தாவின் பிரசங்க கூட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது தான் பிரபுதாநந்தா என்ற சாமியார் குறித்தும் அவர் கேள்விப்பட்டுள்ளார். பிரபுதாநந்தா மத்திய பிரதேசத்தில் தட்டுவாடா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார்த்திக் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பிரபுதாநந்தா சாமியாரிடம் சென்றுள்ளார். தங்களுக்கு குழந்தை இல்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பிரபுதாநந்தா நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் நேரில் வரும்படி கூறியுள்ளார்.
துணை போன கணவர்: அப்போதெல்லாம் பிரபுதாநந்தா ஆக்ரோஷமான பூஜைகளை செய்துள்ளார்.
இதுவே கார்த்தியின் மனைவிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இது குறித்து தனது கணவரிடம் கூறியதற்கு அவரே, “சாமி சொன்ன மாதிரி செஞ்சா தான் குழந்தை பிறக்கும். நீ அமைதியா இரு” என்று சொல்லியுள்ளார்.
இதனிடையே மத்திய பிரதேசத்தில் இருந்த பிரபுதாநந்தா சமீபத்தில் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அப்போது கார்த்திக் மீண்டும் தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
கார்த்திக்கை வெளியே அனுப்பிய பிரபுதாநந்தா, தனிமையில் கார்த்திக்கின் மனைவியடம், “நீ என்னோட ஆசையை நிறைவேத்தனும். அப்போ தான் உனக்கு குழந்தை பிறக்கும்… இல்லைனா உன் கவணவர் கிட்ட உன்னை பத்தி தப்பா சொல்லி பிரித்துவிடுவேன்” என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு மிரண்டு போன அவர், தனது கணவரிடம் சாமியார் கூறியதை அப்படியே சொல்லியுள்ளார்.
இதற்கு அவரது கணவர் கூறிய பதில் தான் அதிர்ச்சியின் உச்சமாக இருந்துள்ளது. மிரட்டல்: அதாவது, “சாமியார் சொல்றத அப்படியே கேளு.. அப்போ தான் நமக்கு குழந்தை பிறக்கும். இல்லைனா குழந்தைக்கு வாய்ப்பே இல்லாயைாம். சாமியார் சொன்னத மட்டும் நீ கேட்களேனா.. உன்னை டைவர்ஸ் பண்றத தவிர வழியில்லை” என்று கூறி மிரட்டியுள்ளார்.
தனது கணவர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தாலும் கூட அந்த பெண் அதை கேட்க மறுத்துவிட்டார்.
கார்த்தியின் தோழி ஒருவரும், “சாமியார் சொல்வதை கேட்கலேனா.. பிரிச்சுடுவாரு” என்று மிரட்டியுள்ளார்.
கணவரே தனக்கு ஆதரவாக இல்லாத போதும், அந்த பெண் தனது முடிவில் தெளிவாக இருந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். மேலும், தனது அனுமதியில்லாமல், தனது மனைவி வீட்டுக்குள் நுழையக்கூடாது என்றும் அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இதனால் அந்த பெண் செய்வது அறியாமல் திகைத்து போய்விட்டார். தனது கணவரை பல முறை தொடர்பும் கொள்ளவும் முயன்றுள்ளார்.
புகார்: அப்படியொரு முறை கால் செய்த போது கார்த்திக், “சாமியார் உன் கூட வாழக் கூடாதுனு சொல்லிட்டாரு.
இனிமேல் கால் செய்து தொந்தரவு பண்ணாத” என்று சொல்லி கட் செய்துவிட்டார். அப்போது சற்று நேரத்தில் கால் செய்த பிரபுதாநந்தா சாமியார், “இப்பவும் சொல்கிறேன்… என்னோட ஆசைகளை நிறைவேத்து..
உடனே உன்னோட கணவரை உன்னோடு சேர்த்து வைக்கிறேன். அதுக்கான பூஜைகள் செய்வேன்” என்று கூறியுள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த பெண் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார்.
இதனால், தனது கணவர் கார்த்திக், அவரது தோழி பிரதீபா மற்றும் பிரபுதாநந்தா சாமியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.