முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர், அக்கடற்படைத்தளத்தில் உள்ள அவரது படுக்கையறையில் நேற்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர் பதுளையைச் சேர்ந்த டபிள்யு.எம்.எல்.பி. வணசிங்க என்ற கடற்படை வீரர் ஆவார்.

இவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் (15) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version