உடலுறவுக்கு இணங்க மறுத்து கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றிய கணவனே அவரைக் கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது.
இந்தியா, சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி ஆஷாவுடன் சேர்ந்து ஏப்ரல் 17ஆம் திகதி மது அருந்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய சங்கர் தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆஷா மறுப்பு தெரிவிக்கவே சங்கர் அவரை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா ஓடிச்சென்று கிணற்றில் குதித்திருக்கிறார்.
மனைவியைக் காப்பாற்ற சங்கரும் உடனடியாக கிணற்றில் குதித்துள்ளார். ஒருவழியாக அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.
இருப்பினும் மீண்டும் மற்றொரு சண்டை வந்துள்ளது. இந்தமுறை ஆத்திரமடைந்த சங்கர், ஆஷாவின் அந்தரங்க பகுதியை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் நேற்று சங்கரைக் கைது செய்தனர்.
சங்கர் தனது மனைவி ஆஷா மற்றும் குழந்தைகளுடன் ரௌனி பகுதிலிருக்கும் ஜவகர் நகரில் வசித்து வந்ததாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து முதற்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.