நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரூ.5 ஆயிரம் பெற்று கொண்டு விஷஊசிப்போட்டு கருணை கொலை செய்ததாக 3 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது சர்ச்சையாகி உள்ள நிலையில் தான் அவர்கள் கருணை கொலை செய்வது எப்படி? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவரை குணமாக்க முடியாதபோது அவர் துடிதுடித்து சிரமப்படுவதை தடுக்கும் வகையில் அவரை கருணை கொலை செய்ய குடும்பத்தினர் அனுமதி கோருவார்கள்.
இதுபற்றி உரிய முறையில் பரிசீலனை நடத்தி முறையான அனுமதியுடன் கருணை கொலை மேற்கொள்ளப்படும். இதனை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் தான் செய்வார்கள்.
இந்நிலையில் தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கருணை கொலையை சிலர் சட்டவிரோதமாக செய்து வருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சார்பில் வீடியோவுடன் ஆதாரம் குமாரபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் 3 பேர் சிக்கினர். பிணவறை ஊழியர் மோகன், போலி டாக்டர் அப்பாவு மற்றும் மருத்துவமனை ஊழியர் கோவிந்தன் ஆகியோர் பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுபற்றி டிஎஸ்பி மகாலட்சுமி நேரடியாக விசாரித்தனர். இதற்கிடையே தான் இன்று அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு எதிராக யாரும் புகார் அளிக்கவில்லை எனக்கூறி போலீசார் விடுவிடுத்துள்ளனர். இது சர்ச்சையாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அவர்கள் கருணை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கூறிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஒரு நபர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, செய்தியாளர்களிடம் சிக்கிய ஒருவர் கூறுகையில், ‛‛நான் 15 வருடமாக கருணை கொலை செய்து வருகிறேன். 300 பேரை கொலை செய்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
அதோடு வீடியோ எடுப்பதை உணர்ந்த அவர், ‛‛தன்னிடம் இருக்கும் மருந்து மாட்டுக்கு செலுத்தக்கூடியது தான்.
மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 வரை பெற்று கொண்டு அங்குள்ள மெடிக்கல்களில் மருந்து, ஊசி வாங்கி கருணை கொலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தான் அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.