சென்னை: Nayanthara Net worth (நயன்தாராவின் சொத்து மதிப்பு)லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன் தாராதான் தமிழில் டாப் 1 நடிகை.

நடிகைகளில் அதிக அளவு சம்பளம் வாங்குபவர் என்று பெயர் எடுத்திருக்கும் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டானது.

மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என கணித்தனர்.

அதன்படி, ஐயா படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கும் ஹீரோயினானார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் நயன்தாரா.

முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா: சந்திரமுகி படத்துக்கு பிறகு விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் நயன்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எனவே அடுத்த சில வருடங்களுக்கு நயனின் ஆட்சிதான் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடைபெற போகிறது என பலர் ஆரூடம் கூறினர்.

அவர்களின் ஆரூடம் பலிக்கும்படிதான் நயனின் க்ராஃப்பும் உச்சம் சென்றது.

நயன் தாராவை சூழ்ந்த பிரச்னைகள்: சூழல் நல்லபடியாக போய்க்கொண்டிருக்க சில தனிப்பட்ட பிரச்னைகளை சந்தித்தார் நயன்தாரா.

அதனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் சில காலத்திலேயே அவர் மீண்டும் நடிக்க முடிவெடுத்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அவரது இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம்: காதலால் பிரச்னைகளை சந்தித்த நயன், நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார்.

இருவரும் தீவிரமாக பல வருடங்கள் காதலித்தனர். ஒருவழியாக கடந்த வருடம் ஜூன் மாதம் இருவரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நயன் தொடர்ந்து நடித்துவருகிறார்.

நயன் தாராவின் சம்பளம்: அவர் இப்போது தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் ஹிந்தியிலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துவருகிறார்.

ஜவான் படத்தில் நடித்ததற்காக அவருக்கு 8 கோடி ரூபாய்வரை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இன்னும் சில படங்களில் அவர் 10 கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கிவிடுவார் என கருதப்படுகிறது.

நயனின் சொத்து மதிப்பு: இந்நிலையில் நயன் தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது.

அதாவது நயன் தாரா லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்திவருவதாகவும், தனக்கென ட் ஹனி ஜெட் விமானம் ஒன்றை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த விமானத்தில்தான் கணவருடன் வெளி மாநிலங்களுக்கு சென்று வருவாராம். அதேபோல் மொத்தம் நான்கு சொகுசு கார்களை வைத்திருக்கிறாராம்.

அதன் மதிப்பு மட்டுமே ஐந்து கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது,. மேலும், சென்னையில் பங்களா மற்றும் தனி வீடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் கார் பார்க்கிங்குடன் கூடிய வீடுகளும் உள்ளதாகவும், மொத்த சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாயை நெருங்கும் எனவும் தகவல் ஒன்று பரபரத்துக்கொண்டிருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version