இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (22) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (21) மாலை தென்பட்டமையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான இன்று (21) மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைப் பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version