ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையின் சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை அண்மையில் மலேசிய பொலிஸார் முறியடித்திருந்தனர்.

இச் சம்பவத்தை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.
இந்தக் குழந்தைகள் 60,000 முதல் 70,000 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 30,000 முதல் 50,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version