மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மல்லாவி பகுதியில் புதன்கிழமை (26) இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இருந்து கலந்து கொண்ட சகோதரர்கள் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்தனர்.
அவர்களில், ரவிச்சந்திரன் சுரேஸ் என்ற 16 வயது சிறுவன் துரிசு பகுதியில் நீரில் மூழ்கியுள்ளார். மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற ரவிச்சந்திரன் சுமன் ( வயது 27) என்ற சகோதரனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த இருவரது உடலஙகளும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரது உடலங்களையும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகைதந்து பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்