மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத்பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவை வழிநடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.
ஏப்ரல் 9, மே 9, ஜூ லை 9இல் நடந்த அமெரிக்காவின் விளையாட்டுகளின் உண்மைகள் தொடர்பில் நான் புத்தகமொன்றை வெளியிட்டேன். 9இல் மறைந்துள்ள கதைகள் என்ற பெயரில் அதனை வெளியிட்டிருந்தேன் என்றார்.
அதில் ஒரு நடிகரே (சரத்பொன்சேகா) இதற்கு முன்னர் என்னைப்பற்றி கூறியிருந்தார். போராட்ட இடத்துக்குச் சென்று அவருக்கு மட்டுமே கதைக்க முடியுமாக இருந்தது. அவரே இராணுவத் தளபதியான சவேந்திரசில்வாவை வழிநடத்தினார். நான் புத்தகத்தில் பெயர் குறிப்பிடவில்லை என்றார்.
இதேவேளை ஷவேந்திரசில்வாவை அமெரிக்கா தூதுவரும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுமே வழிநடத்தினர்.
அந்த புத்தகத்தை வெளியிடும் போது அவர்களுக்கு வலிக்கும். தூதுவர் ஜுலீயாவும் அதுபற்றி டுவிட்டரில் அது பொய்யான கருத்து என்று கூறியுள்ளார்.
ஒரு நாளில் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை கூறியுள்ளார். நாட்டை லிபியாவாக மாற்றும் செயற்பாட்டையே நான் வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.
இந்நிலையில், முன்னதாக உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மே 9 போராட்டம் தொடர்பாக வீரவன்ச எழுதிய புத்தகத்தில் ரணிலை உயர்த்தி கூறியுள்ள வீரவன்ச, அரசாங்க பக்கம் தாவி மீண்டும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என்றார்.
புத்தகங்களை எழுதி இராணுவத் தளபதிகள் மீது சேறு பூச வேண்டாம். எனக்கும் சேறு பூசியுள்ளார். இராணுவத் தளபதியாக நாம் இருக்கும் போது எங்கள் பின்னால் வந்தவர் இப்போது புத்தகம் எழுதி சேறு பூசுகின்றார் என்றார்.
நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாகவும் ஷவேந்திர சில்வாவும் நானும் அதனை செய்தாக கூறியுள்ளார். அதில் கோட்டாபயவுக்கும் சேறு பூசுகின்றார்.
ஆனால் ரணிலை உயர்த்தி வைக்கின்றார். ரணிலை ஏமாற்றப் பார்க்கின்றார். அவர் இந்தப் பக்கத்துக்குப் பாய்ந்து மீண்டும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றார் என்றார்.