இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் அவரது கணவரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரையே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகப்படியான இன்சுலின் ஏற்றப்பட்டதால் மயக்கமடைந்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் இதனால், மனைவி​யை கொலைச் செய்யும் நோக்கி வைத்தியர் இந்த இன்சுலின் ஊசியை ஏற்றியிருக்கலாம் என்றும் அறியமுடிகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version