மறைந்த நடிகை ஸ்ரீவித்யா நடிகர் கமலை உயிருக்கு உயிராக காதலித்தார் என்றும் ஆனால், நடிகர் கமல் ஒரே நேரத்தில் 6 நடிகைகளை காதலித்தார் என்றும் நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.
பிரபல நடிகையான குட்டி பத்மினி, தனது யூடியூப் சேனலில் பல முன்னணி நடிகைகள் மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா குறித்தும், கமலின் காதல் குறித்தும் பல விஷயங்களை குட்டி பத்மினி பகிர்ந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: ‘விவாக ரத்து தோல்வி அல்ல’: போட்டோஷூட் மூலமாக டைவர்ஸை அறிவித்த சீரியல் நடிகை ஷாலினி
குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஸ்ரீ வித்யா போல ஒரு அழகான நடிகையை நான் இதுவரை பார்த்தது இல்லை.
அவரது கண் அவ்வளவு அழகாக இருக்கும். அவர் கமல்ஹாசனுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அப்போது, கமல்ஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு நடிகைகளே ரசிகர்களாக இருந்தனர்.
அது போலத்தான் கமலின் நடிப்பைப் பார்த்து ஸ்ரீவித்யாவுக்கு அவர் மீது பைத்தியக்காரத்தனமான காதல் இருந்தது.
நான் கமலுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது கமல், வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார்.
வாணிக்காக அவர் ஏர்போர்ட்டில் கிஃப்ட் வாங்கினார். அதே போல இந்தி நடிகை ரேகாவுடனும் கமலின் பெயர் அடிபட்டு வந்தது.
இதனால், காதல், கீதல் எல்லாம் வேண்டாம் என்று ஸ்ரீவித்யாவிடம் நேரடியாகவே சொன்னேன். ஆனால், நான் சொன்னதை ஸ்ரீவித்யா கேட்கவில்லை.
அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெய சுதா, வாணி கணபதி மேலும் இரண்டு நடிகைகள் உள்ளனர்.
அத்தனை நடிகைகளையும் அவர் எப்படி சமாளித்தார் என்றே தெரியவில்லை. இதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்து இருக்குமோ என்று குட்டி பத்மினி நகைச்சுவையாக கூறினார்.
மேலும், வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டதால், ஸ்ரீவித்யா மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இதில் இருந்து அவரால் பல ஆண்டுகள் மீண்டும் வரவே முடியவில்லை. இந்த நேரத்தில் தான் ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு வர, ஸ்ரீவித்யா அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.
இதில் மீண்டும் வந்த ஸ்ரீவித்யா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் புற்றுநோய் காரணமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காத ஸ்ரீவித்யா, கமல்ஹாசனை பார்க்க விரும்பினார். அதன்படியே கமலும் அவரை சந்தித்தார்.
புற்றுநோயுடன் போராடி வந்த ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு கேரளாவில் அனாதையாக இறந்தார் என்றும் குட்டி பத்மினி கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.