பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை த​டவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 14,15 வயதுடைய மாணவிகளிடமே அந்த அதிபர் பாலியல் சேஷ்டையை காண்பித்துள்ளார்.

52 வயதான அதிபர் கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவருடைய மனைவியும் ஆசிரியை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விரு மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த அதிபர் கைது பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த அதிபருக்கு எதிராக கல்வி வலயத்தின் ஊடாக ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version