ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, ​​சிறிய அளவிலான ஐஸ் மற்றும் சிறிய அளவிலான கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதில், கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 – 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

குறித்த இடத்தில் அவருடன் தங்கியிருந்த இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்..

Share.
Leave A Reply

Exit mobile version