குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறின்போது காலில் கயமடைந்த நபரை பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த நிலையில், அங்கு சிகிச்சையளித்த பெண் வைத்தியரை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் இந்தியாவின்  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றிய 23 வயதான வந்தனா தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான இன்று (10) அதிகாலையில் குறித்த வைத்தியர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்,  வைத்தியர் வந்தனா சிகிச்சை அளித்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த சந்தீப், வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார்.

இதில் வைத்தியர் வந்தனா, பொலிஸார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் வைத்தியர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version