குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்ட 8 பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ரஜீவன் இன்று (13) உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லியடி பகுதியில் வைத்து 8 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு காங்கேசன்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்ததுடன் வாள், கோடரி என்பவற்றையும் மீட்டனர்.
இதையடுத்து 8 பேரையும் இன்று சனிக்கிழமை(13) பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்ட போது எட்டு பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு. R