கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

தலையில் மூன்று முறையும், முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் வந்தனா தாஸின் படுகொலையைக் கண்டித்து, கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றுமாறு முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version