p>பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது.

2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி.

ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது.

எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

நீதித்துறை விசாரணைகள் தொடர்பாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக தனது முன்னாள் சட்டத்தரணி தியறி ஹேர்ஸோக்குடன் இணைந்து நீதிபதி கில்பர்ட் அஸிபேர்ட்டுடன் ஊழல் ஒப்பந்தமொன்றை நிக்கலஸ் சார்கோஸி செய்து கொண்டிருந்தார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.

இதற்காக இரகசிய தொலைபேசி இணைப்பு ஒன்றை யன்படுத்தியதாகவும் சார்கோஸி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வழக்கிலேயே 2001 மார்ச்சில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைக்கு எதிராக நிக்கலஸ் சார்கோஸி மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்தி பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

Share.
Leave A Reply

Exit mobile version