ஜெர்மனியில் சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள் தற்போதும் செயல்பட்டு வருவதாக ஜெர்மன் பாதுகாப்பு அமைப்புகள் அந்நாட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
மேலும் ஜெர்மன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் கடந்த ஃபெப்ரவரி மாதமே இந்த காவல் நிலையங்களை முடி விட்டதாக சீனா தெரிவித்ததாகவும் ஆனால் தற்போதும் இவை செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தற்போது இத்தகைய இரண்டு காவல் நிலையங்கள் உள்ளதாகவும் மேலும் அவை ஒரே இடத்தில் இல்லை தொடர்ந்து மாற்றப்பட்டு கொண்டே வருவதாகவும் சீன மற்றும் சீன குடிமக்கள் அல்லாதோர் இவற்றிற்காக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதமே இவற்றை மூடுவதற்கு ஜெர்மனி அரசு கோரிக்கை விடுத்த போது சரி என சொல்லிவிட்டு அவற்றை மூடாமல் சீன அரசு இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாக ஜெர்மன் உள்துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள சீன தூதரகம் இதுபற்றி எந்த கருத்தையும் வெளியிடவில்லை அதே நேரத்தில் ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இருக்கும் சீனா உடனான உறவை ஜெர்மனி சீராய்வு செய்து வருவது கூடுதல் தகவல் ஆகும்.