சுற்றுலா செல்வதற்கு தயாரான நிலையில் கைத்தொலைபேசியில் பேசியவாறே ரயில் பாதையில்  நடந்து சென்று கொண்டிருந்த  இரு இளைஞர்கள் வடுரவ ரயில்  நிலையத்துக்கு  அருகில்  ரயிலால் மோதப்பட்டு இன்று (25)   உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொட வதுரவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ ரயில் நிலையத்தை நோக்கி  ரயில்  பாதை வழியாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரும் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்ட நிலையிலேயே ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி  ரயிலுடன் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version