இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 375 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 325 ரூபாவில் இருந்து 310 ரூபா வரை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 330 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version