டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் துடிதுடிக்க கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சடலம்… மலைப்பகுதியில் மீட்கப்பட்ட சூட்கேஸில் கூறு கூறாக வெட்டப்பட்ட உடல்… என சமீபத்திய கொலைச் சம்பவங்கள் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லும் வீடியோ வெளியாகி மனதை பதைபதைக்க செய்துள்ளது…

டெல்லி, ஜேஜே காலனியில் நடந்து சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை திடீரென வழிமறித்த சாஹலின் என்ற இளைஞர், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரை கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்தது காண்போரை விழிபிதுங்க செய்தது…

சுற்றி இளைஞர்கள் இருந்தும், அவர்களால் ஏதும் செய்ய முடியாதது போல், வேடிக்கை பார்த்து கொண்டே நகர்ந்து சென்றது பெரும் பரிதாபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது…

இதில், சிறுமியும் இளைஞர் சாஹிலும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது..

இதனால், சாஹிலுடன் பேச மறுத்த சிறுமி அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்… இதற்கிடையே, சிறுமி அவருடைய முன்னாள் காதலனுடன் பழகி வந்ததாக கூறப்படும் நிலையில், இதை அறிந்த சாஹில் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது…

சம்பவத்தன்று, தனது தோழியின் பிறந்த நாள் விழாவிற்காக அவருடைய வீட்டிற்கு சிறுமி சென்று கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அப்போது பின் தொடர்ந்து வந்த சாஹில், சிறுமியை கொடூரமாக தாக்கி, 34 முறை அவரை கத்தியால் குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது…

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தோழி, அவருடைய வீட்டிற்கு சென்று நடந்ததை கூறவே, பதறிப்போய் ஓடோடி வந்த பெற்றோர், சம்பவ இடத்தில் மகளின் நிலையை கண்டு கண்ணீர் மல்க கதறி அழுதது காண்போரை ரணமாக்கியது…

இந்த சம்பவத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சாஹிலை கைது செய்த போலீசார்,

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்… இதில், தன் மகளை கொன்றவரை இதற்கு முன்பு பார்த்ததில்லை எனவும், அவர் யார் என்றே தெரியாது எனவும் கூறும் சிறுமியின் பெற்றோர்,

வழக்கறிஞராக ஆக வேண்டும் என லட்சியத்துடன் இருந்த மகளை கொன்றவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்…

 

Share.
Leave A Reply

Exit mobile version