இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 650 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹவுரா – சென்னை கோரமண்டல் கடுகதி, யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் கடுகதி ஆகியன விபத்தில் சிக்கிய பயணிகள் ரயில்கள் ஆகும்.
விபத்தில் 261 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 650 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இதேவேளை, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நேரிட்டது எப்படி?
அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த கொடூரம் நேரிட்டது.