அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி வந்த சீனாவின் நாசகாரி – தாய்வான் நீரிணையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

அமெரிக்காவும் அதன் சகாக்களும் இந்தோ பசுபிக்கின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என  சீனா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவினதும் சீனாவினதும் யுத்தகப்பல்கள் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கு நெருங்கி வந்த சம்பவத்தின் பின்னர் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெறும் சங்கிரிலா உரையாடல் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் சீனாவி;ன் பாதுகாப்பு அமைச்சர்

அமெரிக்கா சுயநலத்திற்காக நாடுகளின் அணிகளிடையே மோதலை தூண்டுகின்றது வோசிங்டனும் அதன் சகாக்களும் பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளை திட்டமிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உலகத்தினால் தாங்க முடியதாத பேரிடராக காணப்படும் எனவும் லீ சங்புல் எச்சரித்துள்ளார்.

தாய்வான் நீரிணையில் அமெரிக்க கனடா கப்பல்கள் கூட்டுஒத்திகையில் ஈடுபட்டிருந்தவேளை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் சங்ஹ_ன்போர்க்கப்பலின் முன்பகுதியை நோக்கி சீனாவின் நாசகாரியொன்று வந்ததாக அமெரி;க்காவின் இந்தோ பசுபிக் கட்டளைபீடம்  தெரிவித்துள்ளது.

சீன கப்பல் அமெரிக்க கப்பலிற்கு மிக அருகில் வந்தது தொடர்ந்து வந்த கப்பல் பின்னர் மோதலை தவிர்ப்பதற்காக தனது வேகத்தை குறைத்தது என அமெரிக்காவின்  இந்தோ பசுபிக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

 

சீன கப்பல் ஆபத்தான விதத்தில் நடந்துகொண்டுள்ளது சர்வதேச கடற்பரப்பி;ல் பாதுகாப்பான போக்குவரத்திற்கான விதிமுறைகளை மீறியுள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவின் எச்எம்சிஎஸ் மொன்ரியலில் காணப்பட்ட கனடா குளோபல் நியுசின் ஊடகவியலாளர்கள் இதனை படம்பிடித்துள்ளனர்.

சீன கப்பலின் நடவடிக்கைகள் தொழில்சார் தன்மை வாய்ந்தவை இல்லை என  கனடா கப்பலின் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் வார்த்தைகளை விட நடவடிக்கைகள் தெளிவாக அதன் நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன சீனாவின் இவ்வாறான ஆபத்தான  நடவடிக்கைகளை தாய்லாந்து நீரிணையில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்,தெற்கு கிழக்கு  சீன கடலில்  இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துள்ளோம் என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சீன இராணுவத்தின் கிழக்கு கட்டளைப்பீடத்தின் பேச்சாளா சீன படையினர் நிலைமையை தொழில்சார்ரீதியில் கையாண்டனர் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நாடுகள் தாய்வான் நீரிணையில் வேண்டுமென்றே குழப்பத்தை தூண்டுகின்றன தீயநோக்கத்துடன் ஸ்திரதன்மை மற்றும் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன தாய்வானின் சுதந்திரசக்திகளிற்கு தவறான செய்திகளை தெரிவிக்கின்றன என சீன இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ வீரர்களிற்கு எதிராக சீன வீரர்கள் ஆபத்தான விதத்தில் செயற்பட்டது இந்த வாரத்தில் இது இரண்டாவது தடவை.

 

இதேவேளை சீனா தனது படையினரை கட்டுப்பாடுத்த சரியான விடயங்களை செய்யவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அமெரிக்க போர்க்கப்பல்களிடையிலான சம்பவம் மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டைமீறலாம் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version