தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக தமிழில் இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ படம் வெளியாகயிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ்.
தனது படங்களின் வாயிலாக அழுத்தமான அரசியலையும் முன் வைத்து வருகிறார். இவரின் அடுத்த படைப்பாக ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகவும் இந்தப்படம் தயாராகி வருகிறது.
அதில், என்னை பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.