திருமணமான புதுமண ஜோடிகள் முதலிரவின் போது உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் உள்ள கோதியா கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞனுக்குமு் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக திருமணம் நடந்தது.

வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட புதுமண ஜோடிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலிரவு அறைக்குள் சென்ற பின் அவர்கள் தாழிட்டுக் கொண்ட நிலையில் விடிந்த பின் அறைக்கதவை திறக்கவே இல்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மணமக்கள் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில் எப்படி இறந்தார்கள் என உடற்கூராய்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சடைத்து அவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அவ்விருவர்களின் உடல்களும் விறைத்து காணப்பட்டுள்ளன. எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version