வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி கட்டியிருந்த டவளைஅவிழ்த்து வீசி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவமொன்று நிட்டம்புவையில் இடம்பெற்றுள்ளது.

உடம்பை கழுவி விட்டு அந்த மாணவி, இரவு 11 மணியளவிலேயே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அம்மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், நடைபெற்றுக்கொண்டிருக்கும் சாதாரணத் தரப்பரீட்சையில் இன்றைய (07) பரீட்சைக்கு அந்த மாணவியால் தோற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை கட்டிப்பிடித்து, உருண்டு புரளும் போது, அம்மாணவிஅலறியுள்ளார். மகளின் அலறல்சத்தம் கேட்டவுடன்அவரது தாயார் ஓடோடி வந்துள்ளார். இந்நிலையில், அம்மாணவியை அவ்விடத்திலேயே விட்டு விட்டு, சந்தேக நபர் தப்பியோடி விட்டார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை அடையாளம் கண்டு கொண்ட தாயும் மகளும் அவர் தொடர்பிலும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும்பெண்கள் விவகாரப் பணியக அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்யும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version