மும்பையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டி சமைத்து நாய்களுக்கு உணவாக்கியது எப்படி என்பது குறித்து குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

டெல்லிக்கு நிகராக மும்பையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம்தான் மும்பையில் அரசுக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 18 வயது மாணவி, விடுதி வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

அந்த அதிர்ச்சி ஓயும் முன்பாக மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. மும்பை, மீராபயந்தரிலுள்ள கீதா நகரில் இருக்கும் ஆகாஷ்தீப் என்ற கட்டடத்தின் 704-வது அறையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்குத் தங்கியிருந்தவர் மனோஜ் (56). இவருடன் சரஸ்வதி வைத்யா என்ற பெண் திருமணம் செய்துகொள்ளமல் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
மனோஜ்
மனோஜ்

ஆதரவற்ற சரஸ்வதியும் மனோஜும் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும், பக்கத்து வீட்டில் யாருடனும் அதிகமாகப் பேசிக்கொண்டது கிடையாது.

அதனால் அவர்களது வீட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில், திடீரென அவர்களது வீட்டிலிருந்து கெட்ட வாசனை வந்திருக்கிறது.

இரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் மனோஜ் வீட்டுக்கு வந்தபோது அந்த நேரம் மனோஜ் வீட்டில் இருந்தார். அவர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார்.

ஆனால் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர். பின்னர் அவர் வசித்த வீட்டை சோதனை செய்தபோது, உள்ளே மனித உறுப்புகள் வெட்டப்பட்டு கிடந்தன.

அதோடு உடலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மரம் வெட்டும் ரம்பமும் இருந்தது.

அதையடுத்து மனோஜைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் `பகீர்’ தகவல் வெளியானது.

விசாரணையில், சரஸ்வதியைக் கொலைசெய்து 20 துண்டுகளாக வெட்டி, அவற்றை குக்கரில் சமைத்து இரவு நேரங்களில் நாய்களுக்கு உணவாகப் போட்டதை மனோஜ் ஒப்புக்கொண்டார்.

லிவ்-இன் உறவில் வாழ்ந்த காதலியை கொன்ற குற்றச்சாட்டில் மனோஜ் சானி கைது செய்யப்பட்டுள்ளார்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஜெயந்த் ஊடகங்களிடம், “உடல் உறுப்புகளை அப்படியே நாய்களுக்குப் போட்டால், யாராவது பார்த்தால் சிக்கலாகிவிடும் என்று கருதிய மனோஜ், உடல் உறுப்புகளை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் பிறகு நாய்களுக்குப் போட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், உடல் உறுப்புகளை குக்கரில் வேகவைத்து நாய்களுக்கு உணவாகப் போட்டிருக்கிறார்.

மனோஜ்

டெல்லியில் ஷரத்தாவை அவருடைய காதலன் கொலைசெய்து, தடயங்களை அழித்ததுபோல் தானும் தடயங்களை அழிக்க முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவர் நாய்களுக்கு சரஸ்வதியின் உடலை உணவாக்கியதை அவர் வசித்த கட்டடத்தில் குடியிருந்தவர்கள் நேரில் பார்த்திருக்கின்றனர்.

வழக்கமாக மனோஜ் நாய்களுக்கு சாப்பாடு போடமாட்டார் என்றும், திடீரென சில நாள்களாக நாய்களுக்குச் சாப்பாடு போடுவதைப் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version