பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
பதவிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது குறித்த சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் காதலித்த நிலையில், குறித்த பெண் கான்ஸ்டபிளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ரூபா ஒரு லட்சம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் பெண் கான்ஸ்டபிளால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.