நெதர்லாந்தில் நீரில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடியை பூர்வீகமாக கொண்ட 21 வயதான அனுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து வந்த நபர் ஒருவர் நீரில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காப்பாற்றப்பட்ட பிரான்ஸ் நபர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுசனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், 90 நிமிடங்களில் பின்னரே அவர் மீட்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காலநிலை அதிக வெப்பமாக இருந்தாலும் நீரின் வெப்பநிலை குறைந்தே காணப்படுகிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version