அமெரிக்காவில் சாட் டோர்மேன் என்பவர் பல மாதங்களாக திட்டமிட்டு தன்னுடைய மகன்கள் மூன்று பேரை வீட்டில் வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தன்னுடைய மூன்று மகன்களை வீட்டில் வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கிளர்மாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் (Clermont County Sheriff Office) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வியாழனன்று சாட் டோர்மேன் (Chad Doerman) என்பவர், மூன்று, நான்கு, ஏழு வயதுடைய மூன்று மகன்களையும் துப்பாக்கியால் சுடுவதற்காக வரிசையாக நிற்க வைத்திருக்கிறார்.

அப்போது ஒரு சிறுவன் மட்டும் தப்பிக்க முயற்சி செய்து வெளியில் ஓடியிருக்கிறார். ஆனால், சாட் டோர்மேன் அந்த சிறுவனையும் பிடித்து இழுத்துவந்து மூன்று பேரையும் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றார்.

அப்போது சாட் டோர்மேனை தடுக்கச்சென்ற அவரின் மனைவிக்கும் கையில் துப்பாக்கிக்கு குண்டு துளைத்தது.

அதைத் தொடர்ந்து பெண் ஒருவர், 911 எனும் அவசர எண்ணுக்கு போன் செய்து, தன்னுடைய குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

இதேபோல் டிரைவர் ஒருவர், `தந்தை எல்லோரையும் கொலைசெய்கிறார்’ என்று ஒரு பெண் கத்தியபடி வெளியில் ஓடியதாக அதே அவசர எண்ணுக்கு போன் செய்து கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சில மருத்துவர்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சாட் டோர்மேனின் மனைவி சின்சினாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால், சாட் டோர்மேனின் மகளின், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை. பின்னர் அங்கேயே வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த சாட் டோர்மேனை போலீஸார் கைதுசெய்தனர்.

போலீஸார் அவரிடத்தில் விசாரித்ததில், பல மாதங்களாகத் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்ததாக அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால், கொலைக்கான காரணம் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையிலும், சாட் டோர்மேன் திட்டமிட்டு மூன்று மகன்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version