தப்பி ஓடிய மகனையும் இழுத்து வந்து சுட்டுக்கொலை மகள் மட்டும் எப்படியோ தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

இன்னொரு மகன் உயிர் பிழைப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு ஓட முயன்றான். அப்போது அவனையும் இழுத்து வந்து கொடூரமாக சுட்டுக்கொலை செய்தார்.

தன் முன்னே மகன்களை சுட்டுகொல்ல முயன்ற கணவரை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கு கையில் காயம் ஏற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட மகள் மட்டும் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து க்ளெர்மாண்ட் கவுண்டி ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

முதலில் இந்த சம்பவம் குறித்து இருவர் அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் எனது குழந்தைகள் சுடப்பட்டன என ஒரு பெண்மணி அழைத்திருக்கிறார்.

பிறகு அந்த வழியாக சென்ற ஒரு வாகன ஓட்டுனர், ‘என் தந்தை எல்லோரையும் கொல்கிறார்’ என கூச்சலிட்டுக் கொண்டே தெருவில் ஓடிவந்த ஒரு சிறுமியை கண்டதும், 911 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

துணை மருத்துவ சிகிச்சையினர், உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அந்த 3 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

குழந்தைகளின் தாய் கைகளில் சுடப்பட்டு லேசான காயங்களுக்காக சின்சினாட்டி நகரில் உள்ள பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டோர்மேனின் கரங்களிலிருந்து துப்பாக்கியை பறிக்கும் முயற்சியில் அவர் கைகளில் சுடப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ஆனால், டோர்மேனின் மகளின் வயதோ, அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் குறித்தோ, அவற்றின் தீவிரம் குறித்தோ எந்த தகவலுமில்லை.

சம்பவத்திற்கு பிறகு டோர்மேன், அந்த வீட்டின் வெளியே உள்ள தாழ்வாரத்தின் அருகே அமர்ந்திருந்தார். பின்னர் அதிகாரிகளின் விசாரணையின்போது, பல மாதங்களாக இந்த கொடூர செயலை தாம் திட்டமிட்டிருந்ததாகவும், வீட்டின் முன் தன் மகன்களை நிறுத்தி வைத்து சுட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த குற்றத்தை அவர் செய்ததற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version