வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் ரெயில் போக்குவரத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

இதனால் விடுமுறை காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில் நெரிசல் மிகுந்த ரெயிலில் பயணித்த ஒருவர் கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.

இந்த சம்பவம் தேவகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபிஜித் டிப்கே என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவரது உறவினர் ஒருவர் அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதிகாலை 2 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல முயன்ற போது ரெயில் பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

பெட்டியின் தரையிலும் பயணிகள் அதிகளவில் அமர்ந்திருந்ததால் அவரால் கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் அவர் பெர்த்கள் மீது ஏறி ஒவ்வொரு சீட்டையும் கடந்து கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்லும் காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ரெயில் பயணத்தை ஒரு சாகச விளையாட்டாக மாற்றியதற்கு ரெயில்வேக்கு நன்றி என ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார்.

மேலும் சில பயனர்கள் தாங்களும் இதுபோன்ற சூழ்நிலையை பலமுறை எதிர் கொண்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version