அம்பாறை இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு மாணவிகளும் தாங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 15 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதன் பின்னர் இவர்கள் தொடர்பில் 7 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பி.ஜி. அஷானி விஷ்மிகா மற்றும் ஆர்.எம்.பவீஷா நெத்மினி ஆகிய மாணவிகளே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் இங்கினியாகல பொல்வத்த பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வருகின்றனர்.