வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டடுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் புதன்கிழமை(28) வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்தநிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.