டைட்டானிக் கப்பலினை பார்வையிடச் சென்று வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளுக்குள் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலின் ஆய்வுக்காக வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான கடல் பரப்பிற்குகள் சென்ற போது வெடித்து சிதறிய குறித்த கப்பலின் பாகங்கள் புதன்கிழமை (29) கனடாவின் செயின்ட் ஜோன்ஸில் தரையிறக்கப்பட்டன.
அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் அனுமானிக்கப்படும் எச்சங்களை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.