இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரயிலில் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். பயணத்தின் போது ரயிலில் உள்ள மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போது, பிரதமர் டெல்லி பல்கலைக்கழக கணினி மையம் மற்றும் அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படும் கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version