யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை ஞாயிற்றுக்கிழமை (02) நடத்தினார்.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அக்கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இறுதி யுத்த காலத்தில் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராகவே நானிருந்தேன் என்றார்.

அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version