சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம்.

தற்போது தாய்வானில் ஒரு ஹோட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது.

இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.

அந்த உணவு இளம் பெண்ணுக்கு பறிமாற படுகிறது. அதை அந்த பெண் ருசித்து சாப்பிடுவதோடு, இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார்.

காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு வகையின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,900 ஆகும்.

Share.
Leave A Reply

Exit mobile version