இன்று அதிகாலை அம்பன்பொல பிரதேசத்தில் யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதெனிய – அனுராதபுரம் வீதியில் பாதெனிய மகா வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஆண் ஒருவரும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply

Exit mobile version